பிரபல இயக்குனர் சமுத்திரக்கனி நடித்து இயக்கியுள்ள 'தொண்டன்' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படம் ஒரு சமூக அக்கறையுள்ள படம் என்று சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்
நானும் நாலு பாட்டு, ஒரு குத்துப்பாட்டு, ஆக்சன் காட்சிகள் அடங்கிய கமர்சியல் படம் எடுக்கணும்ன்னு நினைக்கின்றேன், ஆனால் அது என்னால் முடியவில்லை. ஏனெனில் எனக்கு அது தெரியாது
இந்த படம் ஒரு சராசரி மனிதனின் மனநிலையை குறிக்கும் படம். கிராமங்களில் நாயை கல்லால் அடித்தாலே நாலு பேர் சப்போர்ட்டுக்கு வருவார்கள். ஆனால் சிட்டியில் ஒரு மனிதனை அடித்தால் கூட கேட்க நாதியில்லை. சமூக குற்றங்களை நாம் கண்ணால் கண்டும் காணாத மாதிரி போய் கொண்டிருக்கின்றோம்
ஆனால் என் படம் வெளியான பின்னர் இனி எவனும் பெண்களை கிண்டல் செய்ய மாட்டான், அந்த அளவுக்கு பெண்களை கிண்டல் செய்தால் என்ன நடக்கும் என்பது குறித்து அழுத்தமான காட்சிகள் வைத்துள்ளேன்' என்று கூறியுள்ளார்.