Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி?

Webdunia
புதன், 19 டிசம்பர் 2018 (22:32 IST)
உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2' படங்களை இயக்கிய பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்து வரும் படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிக்க சமுத்திரக்கனியை இயக்குனர் ராஜமெளலி தேர்வு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சமுத்திரக்கனியின் கேரக்டர் இந்த படத்தின் திருப்புமுனை கேரக்டர் என்றும், இந்த படத்திற்காக சமுத்திரக்கனி ஒரு பெரிய தொகையை சம்பளமாக பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படம் தமிழிலும் வெளியாகவுள்ளதால் இந்த படத்தின் முக்கிய கேரக்டருக்கு தமிழ் நடிகரை இயக்குனர் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே 'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் தமிழ் நடிகர் சத்யராஜூக்கு 'கட்டப்பா' என்ற முக்கிய கேரக்டரை அவர் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்!

சூர்யாவின் பாலிவுட் படத்தில் இணைந்த ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments