Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ராஜமௌலி இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நடிகை – ஆர் ஆர் ஆர் பட அப்டேட்…

Advertiesment
ராஜமௌலி இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நடிகை – ஆர் ஆர் ஆர் பட அப்டேட்…
, சனி, 1 டிசம்பர் 2018 (15:00 IST)
ராஜமௌலி பாகுபலி 2 பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு தனது அடுத்தப் படத்தினை இயக்க தயாராகி விட்டார்.

நான் ஈ, பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 ஆகிய திரைப்படங்களின்  மூலம் இந்தியாவின் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில்  தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து விட்டார். அவர் படங்கள் தெலுங்கு சினிமாவில் எந்த அளவுக்கு  வியாபாரம் ஆகிறதோ அதே அளவுக்கோ அல்லது அதற்கு மேலோ மற்ற மொழிகளிலும் வியாபாரம் செய்கிறது.

பாகுபலி 2-ன் விஸ்வரூப வெற்றிக்குப் பிறகு அவரது அடுத்தப் படத்தை இந்தியாவே ஆவலாக காத்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இரண்டு பாக்ஸ்ரகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதையைப் படமாக்க தயாராகி விட்டார். இதில் ஜூனியர் என் டி ஆரும் ராம் சரணும் கதாநாயகர்களாக நடிக்க இருக்கின்றனர். தற்போது படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க பிரியாமணி ஒப்பந்தமாகியிருக்கிறார். சில ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த பிரியாமணி இந்த படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

பிரியாமணி ஏற்கன்வே ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர் ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடிக்கும் நாஞ்சில் சம்பத்!