Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''யசோதா'' படத்தில் நடித்த சமந்தாவுக்கு குவியும் பாராட்டுகள்!

Webdunia
வெள்ளி, 11 நவம்பர் 2022 (17:24 IST)
நடிகை சமந்தா நடிப்பில்  இன்று வெளியாகியுள்ள படம் யசோதா. இப்படத்தில் நடித்ததற்காக அவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
 

தமிழ் சினிமாவில் விண்ணத்தை தாண்டி வருவாயா படத்தின் அறிமுகம் ஆனவர் சமந்தா. இப்படத்திற்குப் பின், அஞ்சான்,தெறி, கத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

சமீபத்தில், இவர் விஜய் சேதுபதி, நயன் தாராவுடன் இணைந்து நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த நிலையில்,  ஹரீஸ்  நாயரணன் ஹரி ஷங்கர் இயக்கத்தில்,  சமந்தா நடிப்பில், இன்று வெளியான படம் யசோதா. இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

இந்த படம் வாடகைத் தாய் சம்மந்தப்பட்ட திரில்லர் கதையாக உருவாகியுள்ளதால், ரிலீஸான இன்று ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.


சமீபத்தில் மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக சமந்தா கூறியிருந்த நிலையில் ரசிகர்கள் அவர் குணமடைய பிரார்த்தனை செய்தனர்.

இந்த நிலையில், சமந்தாவுக்கு யசோதா படத்தில் சிறப்பாக நடித்திருப்பதாக அவருக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெற்றிமாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐஜியிடம் புகார் அளித்த வழக்கறிஞர்..!

கிளாமர் க்யூன் யாஷிகாவின் லேட்டஸ்ட் அசத்தல் புகைப்படத் தொகுப்பு!

ஸ்டைலிஷ் லுக்கில் ஹூமா குரேஷியின் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

அந்த இரண்டு படங்களுக்கு விருதுகள் இல்லாதது ஏமாற்றமே- வைரமுத்துவின் வாழ்த்துகளும் ஆதங்கமும்!

‘ஆடுஜீவிதம்’ படத்திற்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை? ரசிகர்கள் அதிருப்தி

அடுத்த கட்டுரையில்
Show comments