Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடல்நிலைக்காக பழனிக் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த சமந்தா!

உடல்நிலைக்காக பழனிக் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த சமந்தா!
, செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (08:49 IST)
சமந்தா பழனி முருகன் கோயிலுக்கு சென்று அங்கு சிறப்பு வழிபாடு செய்து வருகிறார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா அறிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தார். இதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அவர் எந்த படம் மற்றும் விளம்பரங்களிலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் இப்போது சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறியுள்ள அவர் வருண் தவானோடு இந்தியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்நிலையில் முழு உடல்நலத்துக்காக இப்போது பழனி முருகன் கோயிலுக்கு சென்றுள்ள அவர் 600 படிகளிலும் கற்பூரம் ஏற்றி சிறப்பு வழிபாடு செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

38 நாட்கள் நடந்த நிவின் பாலியின் ஏழு மலை ஏழு கடல் படத்தின் டப்பிங் பணிகள்!