Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனி விமானத்தில் இமயமலை சென்ற சமந்தா… ரிஷிகேஷில் சாமி தரிசனம்!

தனி விமானத்தில் இமயமலை சென்ற சமந்தா… ரிஷிகேஷில் சாமி தரிசனம்!
, சனி, 23 அக்டோபர் 2021 (15:31 IST)
நடிகை சமந்தா தனது ஆடை வடிவமைப்பாளருடன் இமயமலைக்கு அருகில் உள்ள ரிஷிகேஷுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் கடந்த 2017ல் திருமணமான நிலையில் சமீபத்தில் அவர்கள் தங்கள் விவாகரத்தை அறிவித்துள்ளனர். இது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்துக்கு பலரும் பல காரணங்களை பேசி வந்த நிலையில், தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என சமந்த கடந்த வாரம் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து விவாகரத்துக்கு சமந்தாதான் காரணம் என்றும், அவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்தார் என்றும் குழந்தை பெற்றுக்கொள்வதை விரும்பவில்லை என்றும் அவர் மேல் அவதூறுகள் வைக்கப்பட்டன. இதையடுத்து அவருக்கு நெருக்கமானவர்கள் ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.

இதையடுத்து மன நிம்மதிக்காக சமந்தா இப்போது வெவ்வேறு ஆன்மிக தளங்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகிறார். அதில் ஒரு கட்டமாக தனது ஆடை வடிவமைப்பாளர் ஷில்பா ரெட்டியோடு தனி விமானத்தில் இமயமலைக்கு அருகில் உள்ள உத்தரகாண்ட் மற்றும் ரிஷிகேஷ் ஆலயம் ஆகிய இடங்களுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மண்டேலா படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்த யோகி பாபு!