Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வருங்கால கணவரை மிரட்டிய சமந்தா

Advertiesment
வருங்கால கணவரை மிரட்டிய சமந்தா
, புதன், 6 செப்டம்பர் 2017 (11:59 IST)
ராக்கி கட்டி அண்ணன் ஆக்கிவிடுவேன் என நடிகை சமந்தா தனது வருங்கால கணவர் நாக சைதன்யாவை மிரட்டியுள்ளார்.


 

 
நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா ஆகியோருக்கு அடுத்த மாதம் கோவாவில் திருமணம் நடைபெற உள்ளது. நாக சைதன்யா நடித்துள்ள யுத்தம் சரணம் என்ற படம் வரும் 8ஆம் தேதி வெளியாக உள்ளது.
 
இதற்காக சமந்தாவும் தனது காதலருடன் இணைந்து அவருக்காக படத்தை விளம்பரம் செய்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் விளம்பரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட நாக சைதன்யா அவரது காதல் அனுபவம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:-
 
நாங்கள் இருவரும் ஆரம்பத்தில் வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வந்தோம். சமந்தா, வீட்டில் உள்ளவர்களிடம் சீக்கிரமாக தெரிவிக்குமாறு என்னை வற்புறுத்தினார். நான் வீட்டில் சொல்லாமல் காலம் கடத்தி வந்தேன். 
 
சமந்தா என்னை மிரட்டினார், நீ வீட்டில் காதலை சொல்லி அனுமதி வாங்காவிட்டால் ராக்கி கட்டி அண்ணண் ஆக்கிவிடுவேன் என்றார். அதன்பிறகே நான் வீட்டில் காதலை தெரிவித்தேன் என்றார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சேதுபதி மனசு யாருக்கு வரும்?