Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏன் தமிழ்ப் படங்களில் நடிப்பதில்லை… சமந்தா சொன்ன பதில்!

Webdunia
சனி, 25 ஜனவரி 2025 (09:59 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் ரக்த் பிரம்மாண்ட் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால்  அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.இது தவிர அவர் கைவசம் படங்கள் எதுவும் இப்போது இல்லை. சமீபகாலமாக அவர் நடித்த ‘குஷி’ மற்றும் ‘சகுந்தலம்’ ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன.

சமந்தா சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். அவர்களின் விவாகரத்துக்கு பிறகு சமந்தா படங்களில் நடிப்பதை பெருமளவுக் குறைத்துக்கொண்டுள்ளார். தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துக்கு பிறகு வேறு எந்த புதிய படத்திலும் அவர் கமிட்டாகவில்லை.

இந்நிலையில் ஏன் தமிழ்ப் படங்களில் நடிப்பதில்லை என்ற கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார். அதில் “நான் எனது சினிமா வாழ்க்கையின் முக்கியமானக் கட்டத்தில் இருக்கிறேன். நான் தேர்வு செய்யும் படங்கள் இந்த படம்தான் எனது கடைசிப் படம் என்ற தாக்கத்தை எனக்குக் கொடுக்கவேண்டும். அப்படி இல்லையென்றால் நான் நடிக்க ஒப்புக் கொள்வதில்லை” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் அரசியல் மீது எனக்கு சந்தேகம் இருக்கிறது. நடிகர் பார்த்திபன்..!

என் படங்களை என்னையே ட்ரோல் பண்ண வைத்துவிட்டார்கள்.. சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ குறித்து கௌதம் மேனன்!

இங்கிலாந்தில் கங்கனா ரனாவத்தின் ‘எமர்ஜென்ஸி’ படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சீக்கிய அமைப்புகள்!

யாரைக் காப்பாற்ற யாரைப் பலிகொடுப்பது?! வேங்கைவயல் வழக்கு குறித்து பா ரஞ்சித்..!

சிவா, ஹெச் வினோத் வரிசையில் இணையும் மகிழ் திருமேனி… அஜித் கொடுத்த வாக்குறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments