Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாங்கிய அட்வான்ஸ் தொகைகளை திரும்பி கொடுத்த சமந்தா!

வாங்கிய அட்வான்ஸ் தொகைகளை திரும்பி கொடுத்த சமந்தா!
, வியாழன், 20 ஜூலை 2023 (13:57 IST)
இப்போது சமந்தா பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். இது தவிர அவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்துள்ள குஷி படத்தின் ஷூட்டிங்கை முடித்துள்ளார். இவை தவிர அவர் கைவசம் வேறு படங்கள் இல்லை.

இந்த இரு பிராஜக்ட்களை முடித்துவிட்டு  அவர், சினிமாவில் இருந்து ஒரு வருடம் இடைவெளி எடுத்துக் கொள்ள போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக மையோசிட்டிஸ் எனும் தசை அழல்சுழற்சி நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டார்.

இந்நிலையில் இப்போது சில படங்களில் நடிக்க, அவர் வாங்கிய முன்பணத்தை இப்போது திரும்பிக் கொடுத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சமந்தா சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்ள போவது உறுதியாகியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணிப்பூர் விவகாரம்: காட்டுமிராண்டிகளின் தலையில் அடிக்க வேண்டும்- வைரமுத்து