Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சமந்தாவின் ‘ஷாகுந்தலம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Advertiesment
shakundalam
, திங்கள், 2 ஜனவரி 2023 (12:10 IST)
சமந்தாவின் ‘ஷாகுந்தலம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
பிரபல நடிகை சமந்தா நடித்த யசோதா என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் தற்போது அவர் நடித்துள்ள அடுத்த திரைப்படமான ‘ஷாகுந்தலம்’ என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
சமந்தா முக்கிய வேடத்தில் நடித்த ‘ஷாகுந்தலம்’  படம் தமிழ் உள்பட 5 மொழிகளில் உருவாகி உள்ளது என்பதும் இந்த படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த படம் 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என்றும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் வெளியாகும் என்றும் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 
 
மோகன்பாபு, அதிதி பாலன், பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் இந்த படமும் யசோதா போல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் டி ராஜேந்தர் ஆடியோ கம்பெனி தொடக்கம்… பொங்கலுக்கு தேசபக்தி பாடல் ரிலீஸ்!