Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மார்க்கெட் இருக்கும் போதே வில்லி கேரக்டரில் நடிக்கும் சமந்தா? எல்லாம் அதுகாகதானாம்!

Advertiesment
மார்க்கெட் இருக்கும் போதே வில்லி கேரக்டரில் நடிக்கும் சமந்தா? எல்லாம் அதுகாகதானாம்!
, புதன், 16 டிசம்பர் 2020 (12:02 IST)
நடிகை சமந்தா பேமிலி மேன் வெப் சீரிஸில் எதிர்மறைக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி மற்றும் சந்தீப் கிஷான் உள்ளிட்ட பலர் நடித்த சீரிஸ் பேமிலி மேன். அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான இந்த சீரிஸ் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றதை அடுத்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிகை சமந்தாவும் நடித்துள்ளார். இது சமந்தா முதன் முதலாக ஓடிடிக்காக நடிக்கும் தொடராகும். அதுமட்டுமில்லாமல் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் சமந்தா முதன் முதலாக இந்த சீரிஸில் கொடூரமான வில்லிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தது குறித்து பேசியுள்ள சமந்தா ‘ஒடிடி தளங்கள் நடிகர்களுக்கு பரிசோதனை செய்வதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. விதிகளை உடைக்கும் வாய்ப்பை ஓடிடி எங்களுக்கு வழங்குகிறது. என்னை ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் பார்த்த ரசிகர்களுக்கு இந்த தொடர் ஆச்சரியமாக இருக்கும்.’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

50 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் – தமிழக அரசுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை!