Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனக்கு சினிமாவில் நண்பர்கள் இல்லை.. 15 ஆண்டுகள் நிறைவு குறித்து சமந்தா மனம்திறப்பு!

vinoth
வியாழன், 6 மார்ச் 2025 (08:21 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் ரக்த் பிரம்மாண்ட் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால்  அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை.

இது தவிர அவர் கைவசம் படங்கள் எதுவும் இப்போது இல்லை. சமீபகாலமாக அவர் நடித்த ‘குஷி’ மற்றும் ‘சகுந்தலம்’ ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்தன. சமந்தா சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருடைய காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். அவர்களின் விவாகரத்துக்கு பிறகு சமந்தா படங்களில் நடிப்பதை பெருமளவுக் குறைத்துக்கொண்டுள்ளார். தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்துக்கு பிறகு வேறு எந்த புதிய படத்திலும் அவர் கமிட்டாகவில்லை.

இந்நிலையில் சினிமாவில் அவர் அறிமுகம் ஆகி 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இது சம்மந்தமாக நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது “சினிமாவில் 15 வருடங்கள் என்பது மிகவும் நீண்ட காலம். இப்போது என்னுடைய சில படங்களைப் பார்க்கும் போது இவ்வளவு மோசமாகவா நடித்திருக்கிறோம் என்று தோன்றுகிறது. ஆனால் நான் அப்படி செய்துதான் கற்றுக் கொண்டேன். எனக்கு சினிமாவில் வழிகாட்டிகள், நண்பர்கள் யாரும்  கிடையாது.  எல்லாவற்றையும் புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. இப்போது என் பலம் மற்றும் பலவீனம் எல்லாம் தெரியும் என்பதால் அடுத்த 15 வருடங்களை ஆவலாக எதிர்பார்க்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்யூட்டான லுக்கில் ஹாட்டான போஸ் கொடுத்த திவ்யபாரதி!

அழகுப் பதுமை ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும்.. செல்வராகவனின் இன்றைய தத்துவ முத்து!

மும்பையில் முகாமிட்ட லாரன்ஸின் ‘காஞ்சனா 4’ படக்குழு!

பா ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’ படம் தொடங்குவதில் தாமதம்… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments