Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Flop ஹீரோயின் - மனமுடைந்த சமந்தா!!

Webdunia
சனி, 14 மார்ச் 2020 (13:05 IST)
இதுநாள் வரை விமர்சனங்களை பொருட்படுத்தாமல் இருந்து வந்த சமந்தா இப்போது விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார். 
 
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான இருந்த 96 படம் அமோக வரவேற்பை பெற்றதோடு கலெக்ஷனிலும் கல்லா கட்டியது. இப்படத்தில் அமோக வெற்றியை கண்டு பிற மொழி திரைத்துறையினர் தங்கள் மொழிகளில் 96 படத்தை ரீமேக் செய்ய முயற்சித்தனர்.
 
இதன் தெலுங்கு பதிப்பு சமந்தா மற்றும் சர்வானந்த் நடிப்பில் ஜானு என்ற பெயரில் உருவானது. தமிழில் இயக்கிய பிரேம் குமாரே ஜானு படத்தையும் இயக்கினார். தமிழில் பெருவெற்றி அடைந்தை அடுத்து தெலுங்கில் கூடுதல்  பட்ஜெட்டில் படம் உருவாக்கப்பட்டது. 
 
இந்நிலையில் படம் நல்ல வரவேற்பை பெறவில்லை. இதனால் நடிகை சமந்தா மீது நிறைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இதுநாள் வரை விமர்சனங்களை பொருட்படுத்தாமல் இருந்து வந்த சமந்தா இப்போது பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, 
 
ஒரு கதாநாயகன் தொடர்ந்து 3 தோல்வி படங்கள் கொடுத்தாலும், அவரது படங்கள் வரும்போது ரசிகர்கள் தியேட்டர்களில் சென்று பார்க்கிறார்கள். ஆனால் கதாநாயகியை குறை சொல்கிறார்கள். கதாநாயகனுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு சம்பளம் கொடுப்பது இல்லை. ஆனால் நாங்களும் நடிகர்களைப் போல கடுமையாக உழைக்கத்தான் செய்கிறோம் என பதிலடி கொடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

வெண்ணிற உடையில் சமந்தாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

இப்போதே என்னை ஓய்வு பெற சொன்னாலும் மகிழ்ச்சிதான்.. ராஷ்மிகா நெகிழ்ச்சி!

அடுத்தடுத்து அதிரிபுதிரி ஹிட்.. சிரஞ்சீவி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்ற இளம் இயக்குனர்!

50 கோடி ரூபாய் வசூலைக் கடந்த விஷால்- சுந்தர் சி யின் ‘மத கஜ ராஜா’!

அடுத்த கட்டுரையில்
Show comments