Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

Advertiesment
சகுந்தலம்

vinoth

, திங்கள், 1 ஜூலை 2024 (12:11 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குனர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக அவர் மையோசிட்டிஸ் எனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதால்  அவர் அதிகமாக படங்களில் நடிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இப்போது அவர் பேமிலி மேன் இயக்குனர்கள் இயக்கும் சிட்டாடல் என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பின் போது சமந்தா கடுமையான உடல் நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருந்ததாக தன்னுடைய பாட்காஸ்ட் சேனலில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தன்னுடைய பாட்காஸ்ட் சேனலில் பேசிவரும் சமந்தா, தற்போது ஆரோக்யமான உணவுகளை எடுத்துக் கொள்வதன் அத்தியாவசியம் குறித்து பேசியுள்ளார். அப்போது அவரிடம் “நீங்கள் சில ஆரோக்யமற்ற உணவுப் பொருட்களுக்கு முன்பு விளம்பரத் தூதராக செயல்பட்டு உள்ளீர்களே” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர் “ஆம். நான் கடந்த காலங்களில் சில தவறுகளை செய்திருக்கிறேன். ஆனால் அவை போதுவான அறிவில்லாமல் செய்தவை. வேண்டுமென்றே செய்ததில்லை. ஆனால் அது குறித்த தெளிவு வந்தபின்னர் நான் அவற்றை நிறுத்திவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!