Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படப்பிடிப்பில் விபத்து… நடிகர் சல்மான் கானுக்கு எலும்பு முறிவு!

vinoth
திங்கள், 9 செப்டம்பர் 2024 (14:58 IST)
இயக்குனர் முருகதாஸ் தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து சிக்கந்தர் என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜும், கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கின்றனர். இதன் முதல் கட்ட ஷூட்டிங் கடந்த ஜூன் மாதத்தில் நடத்தப்பட்டது.

தற்போது இரண்டாம் கட்ட ஷூட்டிங் நடந்துவரும் நிலையில் தாராவியில் சில காட்சிகளை எடுக்க வேண்டியுள்ளதாம். அதற்காக தாராவி போன்ற செட் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த செட்டுக்காக 15 கோடி ரூபாய் அளவுக்கு செலவிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் சல்மான் கான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஷூடிங்கில் கலந்துகொண்ட போது தவறி விழுந்ததில் அவரின் விலா எலும்பில் சிறு முறிவு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இப்போது அதற்கான சிகிச்சையை மேற்கொள்ளாமல் அவர் தொடர்ந்து முருகதாஸ் படம் மற்றும் பிக்பாஸ் ஷூட்டிங்கில் கலந்துகொள்வதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கண்கவர் லுக்கில் மிரட்டும் நிதி அகர்வால்… ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

ஹன்சிகாவின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் போட்டோஷூட் ஆல்பம்!

ராம்சரணுக்கு மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிடுமோ என பயமாக இருக்கிறது… சிரஞ்சீவி சர்ச்சைப் பேச்சு!

டான் படத்தின் காப்பியா ‘டிராகன்’?… இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஆதங்கம்!

பும்ரா இல்லாமல் செல்வது ரொனால்டோ இல்லாமல் உலகக் கோப்பைக்கு செல்வதைப் போன்றது… முன்னாள் வீரர் புகழாரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments