Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேட்டையன் திரைப்படத்தின் ரிலீஸில் மீண்டும் குழப்பமா?

vinoth
திங்கள், 9 செப்டம்பர் 2024 (14:53 IST)
ஜெயிலர் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கும் வேட்டையன் படத்தில் இப்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் சென்னையில் நடந்தது. முதல் கட்ட ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்தின் ஷூட்டிங்க் முடிந்துள்ள நிலையில் இப்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலீஸுக்கு இன்னும் ஒரே மாதமே உள்ள நிலையில் இன்னும் படப் ப்ரமோஷன்கள் தொடங்கவில்லை.

இந்நிலையில் இப்போது படம் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி படத்தில் சில உண்மை சம்பவங்களைப் பயன்படுத்தியுள்ளதாகவும் அதற்காக சில தடையில்லாச் சான்றிதழ்கள் வாங்க வேண்டியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது தாமதமாகும் பட்சத்தில் படம் சொன்னது போல அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகாது என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடன் லுக்கில் ஜொலிக்கும் ஆரத்தி மாளவிகா மோகனன்… ஸ்டன்னிங் க்ளிக்ஸ்!

ஹாட் & க்யூட் லுக்கில் திவ்யபாரதி… லேட்டஸ்ட் புகைப்பட ஆல்பம்!

வேள்பாரி படத்துக்கான நடிகர்களை இப்படிதான் தேர்வு செய்யப் போறேன்… இயக்குனர் ஷங்கர் கொடுத்த அப்டேட்!

அறிவாளியாக இருந்தால் வெளியே போய்விடுங்கள்… உபேந்திரா படத்தின் ஸ்லைடால் கடுப்பான ரசிகர்கள்!

யாரும் பயப்படவேண்டாம்… நான் நலமுடன் திரும்பி வருவேன் –சிவராஜ்குமார் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments