பாலிவுட் கான் நடிகர்களுக்கு சமீப ஆண்டுகள் சரியாக அமையவில்லை. மூவரும் வரிசையாக தோல்விப் படங்களாகக் கொடுத்து வருகின்றனர். அதில் இருந்து ஷாருக் கான் மீண்டுவிட்டார். இன்னும் சல்மான் கானும், அமீர் கானும் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க முடியவில்லை.
இந்நிலையில் சல்மான் கான் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜும், கதாநாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை அமைத்துள்ளார்.
சமீபத்தில் படத்தின் டீசர் ரிலீஸாகி கவனம் ஈர்த்தது. இந்நிலையில் இந்த படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் முருகதாஸ்- விஜய் கூட்டணியில் உருவான சர்கார் படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது. டீசரிலும் சில காட்சிகள் சர்கார் படத்தை நினைவுப் படுத்துவது போல இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தில் சல்மான் கான் சம்பளமாக எதையும் வாங்கிக் கொள்ளவில்லையாம். மாறாக படத்தின் திரையரங்கு தவிர்த்த உரிமைகளை அவர் பெற்றுக்கொண்டாராம். அதன் மதிப்பு சுமார் 165 கோடி ரூபாயாம். இப்படி அவர் பங்குதாரராக மாறியதால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய சுமை குறைந்துள்ளது. அவர் தயாரிப்பு செலவில் நேரடியாக கவனம் செலுத்தி படத்தை முடிக்கவுள்ளார். ஆனால் இதே தொகையை அவர் சம்பளமாகப் பேசியிருந்தால் ஒரு மிகப்பெரிய தொகையை அவருக்கு முன்பே கொடுத்திருக்க வேண்டும். அதற்கான வட்டியே ஒரு மிகப்பெரிய தொகையாக வந்திருக்கும். பாலிவுட் ஹீரோக்களான சல்மான் கான் மற்றும் அமீர் கான் ஆகியோர் இந்த முறையில்தான் சம்பளம் வாங்குகிறார்களாம்.