Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபாஸின் சலார் 2 எப்போது ரிலீஸ் ஆகும்?... வெளியான தகவல்!

பிரபாஸின் சலார் 2 எப்போது ரிலீஸ் ஆகும்?... வெளியான தகவல்!

vinoth

, திங்கள், 22 ஜனவரி 2024 (10:45 IST)
பிரபாஸ் மற்றும் பிருத்விராஜ் நடித்துள்ள சலார் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணம் இந்த படத்தை இயக்குவது கே ஜி எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதுதான்.  இந்த படத்தை கேஜிஎஃப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தர் தயாரித்துள்ளார். கே ஜி எஃப் இசையமைபபாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.

கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 22 ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆனது. பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு படங்களுக்குப் பின்னர் பிரபாஸ் நடித்த அனைத்து படங்களும் ரசிகர்களை திருப்திப் படுத்தாததால் இந்த படம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு, இந்தியா முழுவதும் அதிக அளவிலான திரைகளில் ரிலீஸ் ஆனது. ஆனால் ரிலீஸுக்கு பிறகு இந்த படம் ரசிகர்களை பெரியளவில் ஏமாற்றியுள்ளதாக சொல்லப்பட்டது.

இதனால் இந்த படத்தின் இரண்டாம் பாகம் மீது பெரியளவில் எதிர்பார்ப்பு இல்லாமல் போய்விட்டது. அதனால் இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டு இறுதிக்கு தள்ளிவைத்து விட்டதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெட்பிளிக்ஸ் தயாரிகும் முதல் இந்திய சினிமா… லேட்டஸ்ட் அப்டேட்!