Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசியாக ஒரு நல்ல படத்தை ரிலீஸ் செய்துள்ளதா ப்ரைம் வீடியோ? சகுந்தலா தேவிக்கு குவியும் பாராட்டுகள்!

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (17:08 IST)
கொரோனா காலத்திற்கு பின்னாக ஓடிடி பிளாட்பார்ம்களில் திரைப்படங்கள் நேரடியாக ரிலீஸ் ஆவது அதிகரித்துள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து திரையர்ங்கங்களும் மார்ச் மாதம் முதல் மூடப்பட்டுள்ளன. இதனால் ரிலிஸூக்கு தயாரான சில படங்கள் இன்னமும் ரிலீஸ் ஆக முடியாமல் பெட்டிக்குள் முடங்கியுள்ளன. இதனால் சிறு மற்றும் குறு பட்ஜெட் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இது திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

ஆனாலும் எதிர்ப்பை மீறி அமேசான் ப்ரைம் பொன்மகள் வந்தாள் மற்றும் பெண்குயின் ஆகிய படங்களை ரிலீஸ் செய்தது. ஆனால் இந்த இரண்டு படங்களும் சுத்த திராபையாக இருந்ததால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தன. மேலும் இந்த படங்கள் எல்லாம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி இருந்தால் ஒரு ஷோவை தாண்டியிருக்க முடியாது என விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் நேற்று வெளியான கணிதமேதை சகுந்தலா தேவியின் பயோபிக்கான சகுந்தலா தேவி படம் ரசிகர்களை ஈர்த்துள்ளது. இதன் மூலம் தங்கள் தளத்துக்கான சரியான படத்தை ப்ரைம் தேர்ந்தெடுத்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். சகுந்தலாதேவியாக நடிகை வித்யா பாலன் மிக சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments