Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

"ட்ரெஸ் மாத்துற மாதிரி பொண்ணுங்கள மாத்துறவன் நீ" வீடியோ வெளியிட்டு விளாசிய சாக்ஷி !

Advertiesment
Sakshi Agarwal
, செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (14:27 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர் சாக்ஷி , வீட்டிலிருக்கும் மற்ற போட்டியாளர்களை பற்றி புறம் பேசி வந்தததால் கடந்த இரண்டு வாரங்களுக்கு  முன்னர் வெளியேற்றப்பட்டார். இதற்கிடையில் கவினுடன் நெருங்கி பழகி வந்த சாக்ஷி பின்னர் காதல் என கூறி கொஞ்சம் நாட்கள் எப்போதும் கவினுடன் நேரத்தை செலவிட்டு  வந்தார். 


 
ஆனால் கவின் லெஸ்லியாவிடம் நெருங்கி பழகியதால் கோப்பட்டு சண்டியிட்டு வந்தார். இருந்தாலும் சில நாட்கள் கவின் , லொஸ்லியா , சாக்ஷி என முக்கோண காதல் அரங்கேறி வந்தது. பின்னர் ஒரு சில காரணத்தால் பிக்பாஸ் வீட்டில் வீட்டில் இருந்து சாக்ஷி வெளியேற்றப்பட்டதை அடுத்து தற்போது கவின் லொஸ்லியா நெருங்கி பழகி காதலிப்பதாக கூறிவருகின்றனர். 
 
ஆனால் நேற்றைய டாஸ்கில் கவினிடம் சாக்ஷியை குறித்து வனிதா கேட்டதற்கு, "சாக்க்ஷியிடன் நான் நெருக்கமாக பழகியது உண்மை தான்.  ஆனால்,  ஒருக்கட்டத்தில் சாக்க்ஷி தன்னை காலி செய்ய நினைத்ததால் அவரிடம் இருந்து விலகி விட்டேன்"  என்று கவின் கூறினார். 
 
இதனால் கடுப்பான சாக்ஷி தற்போது அதை குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்   கவினுக்கு மூன்று கேள்விகளை முன்வைத்துள்ளார் " யார் முதலில் ப்ரொபோஸ் செய்தது யார் என்பது எனக்கு தெரியவேண்டும். கவின் தான் முதலில் தன்னை திருமணம் செய்துகொள்வது போல பேசினார்.   
 
மேலும் "ஷெரினிடம் கவின் 'நீ சாக்ஷியை பார்க்க வேண்டும் என்றால் என் வீட்டில் தான் வந்து பார்க்கவேண்டும். அவர் என் வீட்டில் தான் இனி இருக்கப்போகிறார்' என சொன்னது கவின் தான். என்னை பல இடங்களில் உரிமையுடன் அதிகம் கத்தியுள்ளார். அதை எல்லாம் காட்டவில்லை" என சாக்ஷி குற்றச்சாட்டு வைத்துள்ளார். கடைசியாக  "பொண்ணுங்கள டிரஸ் மாத்துற மாதிரி மாத்திட்டு போவியா கவின்" என்றும் காட்டமாக பேசியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெங்கடாஜலபதி (ரஜினி) மார்கெட் போச்சு; அத்திவரதர் (விஜய்) அடிச்சிட்டாரு... கொளுத்தி விட்ட சீமான்!!