Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோனிக்கென்ன கேமரா புதுசா…? ஹீரோவாக நடிப்பாரா ? சாக்‌ஷி தோனியின் பதில்!

தோனிக்கென்ன கேமரா புதுசா…? ஹீரோவாக நடிப்பாரா ? சாக்‌ஷி தோனியின் பதில்!
, வியாழன், 27 ஜூலை 2023 (08:00 IST)
ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு நடித்துள்ள எல் ஜி எம் படததை தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்குகிறார்.இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. விழாவில் தோனி தன் மனைவி சாக்‌ஷியோடு கலந்துகொண்டார். இந்த படம் நாளை ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் தயாரிப்பாளரான சாக்‌ஷி தோனி ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

அப்படி அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் பத்திரிக்கையாளர்கள் ‘தோனி ஹீரோவாக தமிழ் சினிமாவில் நடிப்பாரா?’ என்ற கேள்வியைப் பத்திரிக்கையாளர்கள் எழுப்பினர். அதற்கு பதிலளித்த சாக்‌ஷி “நல்ல கதை அமைந்தால் தோனி ஹீரோவாக நடிப்பார். அவர் 2007 ஆம் ஆண்டு முதல் கேமராக்களின் முன் விளம்பர படங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறார். அவர் ஹீரோவாக நடித்தால் அது ஆக்‌ஷன் கதையாகதான் இருக்கும். ஏனென்றால் அவர் எப்போதும் ஆக்‌ஷனில் இருப்பவர்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பழம்பெரும் படத்தொகுப்பாளர் விட்டல் காலமானார்!