பிரேமம் படத்தில் மலையாள சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகை சாய்பல்லவி. இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடித்துள்ளார். இதுகுறித்த தகவல் வைரலாகி வருகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான படம் பிரேமம். இப்படத்தில் நிவின் பாலுடன் நடித்தவர் சாய் பல்லவி. இவர் தமிழ் பேசும் மலர் டீச்சராக எல்லொரையும் கவர்ந்தார்.
அதன்பின்னர் மாரி-2 படத்தில் தனுஷுடன் நடித்தார். இதையடுத்து, சூர்யாவுடன் என்.ஜி.கே என்ற படத்தில் நடித்தார்.
இந்நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவரும் சாய்பல்லவி, கடந்த 2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவி- கங்கனா ரனாவத் இணைந்து நடித்த தாம் தூம் என்ற படத்தில் ஒரு துணைக் கதாப்பாத்தில் சாய்பல்லவி நடித்திருந்தார். இப்புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இப்படத்தை மறைந்த இயக்குநர் ஜீவா இயக்கியது குறிப்பிடத்தக்கது.