Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உருவாகிறது நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை வரலாறு – நடிகையாக பிரேமம் நாயகியா?

உருவாகிறது நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை வரலாறு – நடிகையாக பிரேமம் நாயகியா?
, செவ்வாய், 13 அக்டோபர் 2020 (10:56 IST)
கன்னட மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை வரலாறு சினிமாவாக உருவாக உள்ளது.

90களின் இறுதியில் தமிழ் சினிமா உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நாயகியாக வலம் வந்து கொண்டிருந்தவர் சௌந்தர்யா. ரஜினிகாந்த், கமலஹாசன், சிரஞ்சீவி, மம்மூட்டி என தென்னிந்தியாவின் அனைத்து சூப்பர் ஸ்டார்களோடும் ஜோடியாக நடித்து தென்னிந்தியாவின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை சௌந்தர்யா. இவரை பொன்னுமனி எனும் படத்தின் மூலம் இயக்குனர் ஆர் வி உதயகுமார் தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.
webdunia


இந்நிலையில் சினிமா வாய்ப்புகள் குறைந்த போது அவர் அரசியலில் இறங்க முடிவு செய்துள்ளார். 2004 ஆம் ஆண்டு பாஜகவுக்காக பிரச்சாரத்திற்காக சென்ற அவர் ஹெலிகாப்டர் விபத்தில் அவர் மரணமடைந்தார்.இப்போது அவரின் வாழ்க்கை வரலாற்று படத்தினை எடுகக உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் சௌந்தர்யா வேடத்தில் நடிக்க சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

71 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!