பெரும்பாலான தொழிலதிபர்கள் தங்களது நிறுவனத்தை விளம்பரம் செய்ய பிரபல நடிகர் , நடிகைகளை அழைத்து வந்து விளம்பரங்களில் நடிக்க வைத்து பிசினஸை டெவலப் செய்வதில் ஆர்வம் காட்டுவர்.
அந்தவகையில் பிரபல நடிகையான சாய் பல்லவியை தனது துணிக்கடை விளம்பரத்தில் நடிக்க வைக்க ரூ. 1 கோடி சம்பளம் பேசியும் தனது முடிவில் உறுதியாக முடியாது என நிராகரித்துள்ளார். படங்களில் நடிப்பது மட்டுமே தனது கொள்கை விளம்பர படங்ககளில் நடிப்பது அல்ல என்பதில் ஆரம்பக்காலத்திலிருந்தே உறுதியாக இருப்பவர் சாய் பல்லவி.
இதற்கு முன்னர் கூட ஃபேஸ் க்ரீம் விளம்பரம் ஒன்றில் நடிக்க வீடு தேடி வந்த வாய்ப்பை வேண்டாம் என கூறி நிராகரித்த சாய் பல்லவி கிரீம் போட்டுத் தான் சிவப்பாக வேண்டும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை வேறு ஆளை பாருங்க என கூறி அனுப்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.