Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல நடிகர் கேட்டதை செய்த சாய் பல்லவி! – வைரலாகும் போட்டோ!

Advertiesment
Cinema News
, வியாழன், 10 அக்டோபர் 2019 (13:47 IST)
பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மர கன்றுகளை நட்டு அதை டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார் நடிகை சாய்பல்லவி.

பிரேமம் மலையாள படத்தில் ‘மலர்’ டீச்சராக வந்து இளைஞர்கள் மனதை கவர்ந்தவர் சாய் பல்லவி. தனுஷுடன் மாரி 2, இயக்குனர் விஜய் இயக்கத்தில் கரு என தமிழ் படங்கள் பலவற்றிலும் நடித்துள்ளார். தற்போது உலகமெங்கும் புவி வெப்பமயமாதல் குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்பட தொடங்கியிருப்பதால் பிரபலங்களும் இந்த விஷயங்களை முன்னெடுக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் தெலுங்கு நடிகர் வருண் தேஜ் ஒரு செடியை நட்டு அதை போட்டோ எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் நடிகை சாய் பல்லவியை குறிப்பிட்டு இதுபோல செடிகள் நட்டு அதை புகைப்படம் எடுத்து அனுப்பும்படி கூறியுள்ளார்.

க்ரீன் இந்தியா சேலஞ்ச் என்ற இந்த சேலஞ்சை கையிலெடுத்த சாய்பல்லவி தானும் ஒரு செடியை நடுவதை போட்டோ எடுத்து தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் நடிகை சமந்தா மற்றும் ராணா டகுபதியை குறிப்பிட்டு அவர்களுக்கும் இந்த சேலஞ்சை செய்ய சொல்லியுள்ளார்.

இணையத்தில் பல்வேறு நேரங்களில் பல்வேறு சேலஞ்சுகள் பிரபலமாகியிருந்த சூழலில் தற்போது க்ரீன் இந்தியா சேலஞ்ச் பிரபலமாகியுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமன்னாவின் பெட்ரோமாக்ஸ் மேக்கிங் ஸ்டில்ஸ்!