Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாய்பல்லவி நடிப்பில் வெளியான கார்கி… பிரபல ஓடிடியில் ரிலீஸ்

சாய்பல்லவி நடிப்பில் வெளியான கார்கி… பிரபல ஓடிடியில் ரிலீஸ்
, ஞாயிறு, 7 ஆகஸ்ட் 2022 (15:40 IST)
நடிகை சாய்பல்லவி முக்கிய வேடத்தில் நடித்த கார்கி திரைப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது.

பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. ஆனாலும் அந்த ஒரே படத்தின் மூலம் அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு அவர் எல்லா மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த விராட பர்வம் திரைப்படம் பரவலான பாராட்டுகளைப் பெற்றது.

இந்நிலையில் அவர் நடிப்பில் சமீபத்தில் ‘கார்கி’ திரைப்படம் ஜூலை 15 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்டது. மிகப்பெரிய அளவில் பாராட்டுகளைப் பெற்ற கார்கி திரைப்படம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் ரிலீஸாக உள்ளது. இதை சாய்பல்லவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சேதுபதியை மொய்க்கும் தெலுங்கு திரையுலகம்… அநியாயத்துக்கு ஏறும் சம்பளம்!