Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாரா சாய்பல்லவி? என்ன காரணம்?

Siva
வெள்ளி, 18 ஜூலை 2025 (17:59 IST)
கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை சாய் பல்லவிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால் அவர் அந்த அழைப்பை ஏற்கவில்லை என்று கூறப்படுவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கமல்ஹாசன் அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார். இதற்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சாய் பல்லவி தேர்வு செய்யப்பட்டதாகவும், ஆனால் அவர் தற்போது ’ராமாயணம்’ என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக மொத்தமாக கால்ஷீட் கொடுத்துவிட்டதால் தன்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டதாகவும் தெரிகிறது.
 
ஏற்கனவே நடிகை சாய் பல்லவி, விஜய் நடித்த 'வாரிசு' என்ற படத்தில் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படும் நிலையில், தற்போது கமல் படத்திலும் நடிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனை அடுத்து வேறு சில நடிகைகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது 'மாநாடு' நாயகி கல்யாணி பிரியதர்ஷன் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் அவர் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

எந்த பக்கம் நீ நின்றாலும் அந்த பக்கம் கண்கள் போகும்… க்யூட் லுக்கில் சமந்தா அசத்தல்!

ஒரே நாளில் ரிலீஸாகும் அனுஷ்கா & ராஷ்மிகா படங்கள்!

ராகு காலத்தில்தான் எனக்குப் பேருவச்சாங்க… நான் என்ன உருப்படலயா? – சுந்தர்ராஜனின் லாஜிக் கேள்வி!

600 க்கும் மேற்பட்ட ஸ்டண்ட் நடிகர்களுக்கு காப்பீடு எடுத்துக் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments