Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாய் அப்யங்கரை வரவேற்ற மலையாள சினிமா… பல்டி படம் மூலம் எண்ட்ரி!

Webdunia
சனி, 5 ஜூலை 2025 (08:09 IST)
கடந்த சில ஆண்டுகளில் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்று வருகின்றனர் சுயாதீன இசைக்கலைஞர்கள். அதில் முன்னணியில் உள்ளார் சாய் அப்யங்கர். இவர் இசையமைத்து பாடி வெளியிட்ட ‘கட்சி சேர’, ‘ஆச கூட’ மற்றும் ‘சித்திரி புத்திரி’ ஆகிய பாடல்கள் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றன. இவர் பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி ஆகியோரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அவர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’, சூர்யா நடிக்கும் ‘சூர்யா 45’ மற்றும் ப்ரதீப் ரங்கநாதன் நடிக்கும் புதிய படம், சிம்பு நடிக்கும் அவரின் 49 ஆவது மற்றும் 51 ஆவது படம் மற்றும் அட்லி அல்லு அர்ஜுன் இணையும் படம் ஆகியவற்றுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இது தவிர கார்த்தி 29 படத்துக்கும் அவர்தான் இசை என சொல்லப்படுகிறது. தற்போது அவர் கைவசம் பத்துக்கும் மேற்பட்ட படங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் சாய் அப்யங்கர் மலையாள சினிமாவிலும் தற்போது அறிமுகமாகிறார். ஷான் நிகாம் நடிக்கும் பல்டி படத்துக்கு அவர் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதையடுத்து அவரை வரவேற்கும் விதமாக ப்ரோமோ வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட, அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் ‘சின்ன தல’ சுரேஷ் ரெய்னா!

சாய் அப்யங்கரை வரவேற்ற மலையாள சினிமா… பல்டி படம் மூலம் எண்ட்ரி!

கூலி படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம்.. இஷ்டத்துக்கு அடித்துவிடும் யூடியூபர்கள்.. உண்மை நிலை என்ன?

ஒரு புரமோவை கூட திட்டமிட்டு எடுக்க தெரியாத வெற்றிமாறன்? ரசிகர்கள் கிண்டல்..!

மறக்கவே மாட்டேன்.. விஜய் சந்திப்பு குறித்து விஜய்சேதுபதி மகனின் நெகிழ்ச்சி பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments