Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 6 April 2025
webdunia

தள்ளிப்போகும் பிரபாஸின் சாஹோ – பின்னணி என்ன ?

Advertiesment
பாகுபலி
, வெள்ளி, 19 ஜூலை 2019 (13:22 IST)
ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாவதாக இருந்த பிரபாஸின் சாஹோ படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

'பாகுபலி, 'பாகுபலி 2' ஆகிய இரண்டு திரைப்படங்களால் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் பிரபலம் ஆனவர் நடிகர் பிரபாஸ். இந்த இரண்டு படங்களை அடுத்து பிரபாஸ் நடித்து வந்த 'சாஹோ' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் பல படங்கள் தங்கள் ரிலிஸைத் தள்ளி வைத்தன. இந்நிலையில் இப்போது இந்தப்படத்தின் வெளியீடு ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சண்டைக்காட்சிகளில் நேர்த்தியைக் கொண்டு வருவதற்கு இன்னும் சிறிது நேரம் தேவைப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் பிரபாஸோடு நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், மந்திரா பேடி, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். தனிஷ்க் பக்ஷி இசையமைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல்லை மீறி போகும் காதல் - அம்பலமான பிக்பாஸ் ப்ரோமோ!