Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எஸ்.ஏ. சந்திரசேகரின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி: டைட்டில் அறிவிப்பு

எஸ்.ஏ. சந்திரசேகரின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி: டைட்டில் அறிவிப்பு
, திங்கள், 6 செப்டம்பர் 2021 (19:22 IST)
எஸ்.ஏ. சந்திரசேகரின் அடுத்த படத்தில் சமுத்திரக்கனி: டைட்டில் அறிவிப்பு
தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தின் ஹீரோவாக சமுத்திரகனி நடிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டு டைட்டிலும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஸ்டார் மேக்கர் சென்ற நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள எஸ் ஏ சந்திரசேகர் இயக்கும் அடுத்த படத்துக்கு ’நான் கடவுள் இல்லை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சமுத்திரக்கனி ஜோடியாக இனியா மற்றும் சாக்ஷி அகர்வால் நடிக்க இருப்பதாகவும் மேலும் இந்த படத்தில் சரவணன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடிக்க வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
இது ஒரு கிரைம் திரில் படம் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. எஸ்.ஏ. சந்திரசேகர் மீண்டும் தனது பழைய பாணியில் சட்டத்தை கையில் எடுத்து ஒரு த்ரில் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது எஸ்ஏ சந்திரசேகர் அவர்களின்  73 ஆவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் , சூர்யா பட நடிகருக்கு நிச்சயதார்த்தம்!