Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய்யின் அப்பா சந்திரசேகர் முதல் முதலாக நடிக்கும் சீரியல்… யார் யாரெல்லாம் இருக்காங்க!

விஜய்யின் அப்பா சந்திரசேகர் முதல் முதலாக நடிக்கும் சீரியல்… யார் யாரெல்லாம் இருக்காங்க!
, வியாழன், 6 ஏப்ரல் 2023 (08:27 IST)
தமிழ் சினிமாவில் இயக்குனராக பல படங்களை இயக்கியவர் எஸ் ஏ சந்திரசேகர். சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் அவருக்கும் நடிகர் விஜயகாந்துக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பின்னர் பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.

தனது மகன் விஜய்யை கதாநாயகனாக அறிமுகமாக்கி, அதன் பின்னர் அவரை ப்ரமோட் செய்யும் வேலைகளில் ஈடுபட்டதால் முன்பு போல பிஸியான இயக்குனராக செயல்படவில்லை. இந்நிலையில் இப்போது மீண்டும் இயக்கத்துக்கு திரும்பியுள்ள அவர் சமீபத்தில் நான் கடவுள் இல்லை என்ற படத்தை இயக்கி வெளியிட்டார்.

இப்போது நடிகராகவும் சில படங்களில் நடித்து வரும் எஸ் ஏ சி, விரைவில் சீரியலில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள ‘கிழக்கு வாசல்’ என்ற சீரியலில் நடித்துள்ளார். இந்த சீரியலில் சஞ்சீவ், ராதிகா உள்ளிட்டோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விடுதலை படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரமாக வரும் பெருமாள் வாத்தியார் யார்?