Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆதி நடிக்கும் சப்தம் படத்தின் முதல் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

Webdunia
வெள்ளி, 15 டிசம்பர் 2023 (09:14 IST)
ஈரம் மற்றும் குற்ற்ம் 23 ஆகிய படங்களின் மூலமாக கவனம் ஈர்த்தவர் இயக்குனர் அறிவழகன். இதையடுத்து சமீபத்தில் இவர் இயக்கிய தமிழ்ராக்கர்ஸ் என்ற வெப்சீரிஸ் வெளியாகி கவனம் பெற்றது. இதற்கிடையில் அவர் அருண் விஜய் நடிப்பில் இயக்கிய பார்டர் என்ற திரைப்படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

இந்நிலையில் இப்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு அறிவழகன் மீண்டும் ஆதி நடிக்கும் சப்தம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படமும் ஒரு பேய் த்ரில்லர் படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்கு சப்தம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஆதியுடன் சிம்ரன் மற்றும் லைலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை இணையத்தில் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

லவ் மேரேஜா? அரஞ்சுட் மேரேஜா?... நோ மேரேஜ் – கவனம் ஈர்க்கும் ஒன்ஸ்மோர் டீசர்!

மேம்பட்ட மனிதராக பயணம்தான் சிறந்த வழி: நடிகர் அஜித் வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments