Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாட்டை இயக்குனரின் ரூபாய்

சாட்டை இயக்குனரின் ரூபாய்
, வெள்ளி, 28 அக்டோபர் 2016 (18:31 IST)
சாட்டை படத்தை இயக்கிய அன்பழகன் ரூபாய் என்ற படத்தை இயக்கியுள்ளார். ரூபாய் படத்தின் கதை என்ன? அவரே சொல்கிறார்.

 
தேனியில் லாரி டிரைவராக இருக்கும் பரணி - பாபு இருவரும் நண்பர்கள். அவர்களுக்கு இந்த உலகத்தில் இருக்கும் ஒரே சொத்து, சொந்தம் எல்லாமே ஒரு லாரி மட்டும் தான். அந்த லாரிக்கு பணம் கட்ட ஒரு பெரிய சவாரியாக கோயம்பேடு மார்கெட் வருகிறார்கள். ஊர் திரும்பும் போது அவர்களுக்கு ஏற்பட்ட சின்ன பணத்தாசையால் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் மீண்டு ஊருக்கு போனார்களா? இல்லையா? என்பதுதான் படத்தின் திரைக்கதை.
 
பணம் நிம்மதி தராது என்று எந்த ஒரு ஏழையும் சொல்வதில்லை. நிம்மதி தராத பணம் தேவையில்லை என்று எந்த பணக்காரனும் பணத்தை ஒதுக்குவதும் இல்லை. இப்படி எல்லோரது வாழ்க்கையிலும் இன்றியமையாததாகிப்போன பணத்தை பற்றிய ஒரு பயணம் தான் இந்த ரூபாய். இதில் காமெடி, காதல் கலந்து உருவாக்கி உள்ளோம் என்றார்.
 
பிரபுசாலமனின் காட் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஷ்ய அதிபர் மாளிகையில் எஸ்.பி.பி இசை நிகழ்ச்சி