Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாத்தன்குளம் சம்பவம்: ஒருவழியா விஜய் தரப்பில் இருந்து வந்துவிட்டது எதிர்ப்பு

Webdunia
புதன், 1 ஜூலை 2020 (18:14 IST)
சாத்தான்குளம் செல்போன் வியாபாரிகளான தந்தை மகன் லாக்கப் மரணம் குறித்த சம்பவத்திற்கு தமிழ் திரையுலகில் இருந்து கிட்டத்தட்ட அனைவருமே எதிர்ப்பு குரல் கொடுத்து விட்டனர். கடந்த சில நாட்களாக அமைதியாக இருந்த ரஜினி கூட தனது டுவிட்டரில் இன்று ஆவேசமாக தனது கருத்தை தெரிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் சாத்தான்குளம் சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்காதவர்கள் அஜித் மற்றும் விஜய் மட்டுமே என்ற குறை இருந்தது. இதனை அடுத்து தற்போது விஜய் தரப்பில் இருந்து அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் சாத்தான்குளம் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
 
கொரோனா என்ற கொடிய வைரஸிடமிருந்து கூட உயிரோடு தப்பித்து திரும்பி விடலாம். ஆனால் சாத்தான்குளம் போலீஸ் அதிகாரிகளிடம் சிக்கினால் கண்டிப்பாக உயிரோடு திரும்ப முடியாது, இந்த கொரோனா காலத்தில் எத்தனை போலீஸ் அதிகாரிகள் கடவுளுடைய பிரதிநிதிகளாக கருதப்படுகிறார்கள். அதை மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. அப்படிப்பட்ட போலீஸ் துறையில் இதுபோன்ற சாத்தான்களா? இவர்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த சாத்தான்களை காப்பாற்ற நினைக்கும் யாரையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
 
எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் இந்த கருத்தை விஜய்யின் கருத்தாக ஏற்றுக் கொள்ளலாம் என்பதால், தற்போது இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கருப்பு நிற மினி கௌன் ஆடையில் க்யூட் போஸ் கொடுத்த கௌரி கிஷன்!

கிளாமரஸ் லுக்கில் மாளவிகா மோகனனின் ரீஸண்ட் போட்டோஷூட்!

மதராஸி படத்தின் கதை இதுதானாம்… இணையத்தில் பரவிய தகவல்!

துள்ளுவதோ இளமை படத்தில் கூட நடித்த நடிகருக்கு மருத்துவ உதவி செய்த தனுஷ்!

கூலி டிக்கெட்… போன் பண்ணா எடுக்க மாட்டேங்குறாங்க… எஸ் ஆர் பிரபு புலம்பல்!

அடுத்த கட்டுரையில்
Show comments