Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாழ்க பாரதம் என்று சொல்வதில் எங்களுக்கும் பெருமிதமே… ஒளிப்பதிவு திருத்த சட்டம் குறித்து எஸ் ஆர் பிரபு!

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (11:39 IST)
ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள ஒளிப்பதிவு திருத்தச் சட்ட வரைவுக்கு சினிமாக்காரர்களிடம் இருந்து எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

ஒன்றிய அரசு ஒளிப்பதிவு திருத்த சட்டம் 2021 என்பதைக் கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தத்தின் மூலம் ஒன்றிய அரசு நினைத்தால் சென்சார் செய்யப்பட்ட ஒரு திரைப்படத்தைக் கூட மறுபடியும் சென்ஸார் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சினிமாத்துறையினர் மத்தியில் கடுமையான எதிர்ப்பு உருவாகியுள்ளது.

இதுகுறித்து  வெற்றிமாறன், கமல்ஹாசன், கார்த்திக் சுப்பராஜ் மற்றும் சூர்யா ஆகியோர் கருத்து தெரிவித்துள்ள நிலையில் சூர்யாவின் சகோதரரும் தயாரிப்பாளருமான எஸ் ஆர் பிரபு தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதா நாட்டின் இறையாமை காக்கவே என ஒரு கூட்டம் கம்புசுத்துகிறது. இவ்வாறான விசயம் முன்பே இருந்திருந்தால் #அருவி #ஜோக்கர் போன்ற படங்கள் வந்திருக்க வாய்ப்பேயில்லை! ஆகவேதான் நாங்கள் அதை எதிர்க்கிறோம். மற்றபடி வாழ்க பாரதம் என முழங்குவதில் எங்களுக்கும் பெருமிதமே!!’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ராங் நம்பர்.. அமரன் படத்தால் மாணவருக்கு நேர்ந்த சோகம்! இழப்பீடு கேட்டு நோட்டீஸ்!

ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்துக்கு காரணம் இந்த பாடகியா? - உண்மையை சொன்ன வக்கீல்!

‘துப்பாக்கிய பிடிங்க சிவா’ வசனம் முதலில் இல்லை .. கடைசி நேரத்தில் விஜய் சார்தான் மாற்றினார் –சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

அட ஆவணப்படத்துல கூட டப்பிங்தானா?... நயன்தாரா மேல் எழுந்த கடும் விமர்சனம்!

‘பாகுபலி 2’ முந்தியதா ‘புஷ்பா 2’ தமிழக விநியோக உரிமை…!

அடுத்த கட்டுரையில்
Show comments