Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கைதி இரண்டாம் பாகத்திற்கு தடையா? என்ன நடக்கிறது? – எஸ்.ஆர்.பிரபு விளக்கம்

Advertiesment
கைதி இரண்டாம் பாகத்திற்கு தடையா? என்ன நடக்கிறது? – எஸ்.ஆர்.பிரபு விளக்கம்
, ஞாயிறு, 4 ஜூலை 2021 (15:46 IST)
கைதி திரைப்படத்தின் இரண்டாவது பாகம் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கம் அளித்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் கைதி. இந்த படம் ஹிட் ஆனதை தொடர்ந்து இரண்டாவது பாகம் எடுப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இந்நிலையில் கைதி இரண்டாம் பாகம் எடுக்க கேரள நீதிமன்றம் தடை விதித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு “எங்களின் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் கதை, திரைக்கதை, இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படத்தின் ரீமேக் மற்றும் இரண்டாம் பாகம் தயாரிக்க, கேரள நீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்தி ஊடகங்கள் வாயிலாக தெரிய வந்தது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எங்களுக்கு கிடைக்காததால் அதைபற்றிய விபரங்கள் தற்போது சொல்ல இயலாது” என கூறியுள்ளார்.

மேலும் “அதே சமயம் கைதி சம்பந்தப்பட்டு எங்கள் மீது குற்றச்சாட்டுகள் வைத்தால் அதை நிரூபிக்கவும், மறுக்கவும் எங்களால் முடியும். எனவே ஊடகங்கள் விசாரணை முடிவு தெரியாமல் யாரையும் தொடர்பு படுத்தி செய்திகள் வெளியிட வேண்டாம்” என கேட்டுக்கொண்டுளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இனிமே அவருக்கு எனக்கும் எந்த உறவுமில்லை – திருமணத்தை நிறுத்திய நடிகை