Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் அடுத்த படத்தில் எஸ் ஜே சூர்யா… ஆதிக் போடும் ஸ்கெட்ச்!

vinoth
செவ்வாய், 3 ஜூன் 2025 (09:26 IST)
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரிக் குவித்துள்ளது. 250 கோடி ரூபாய்க்கு மேல் திரையரங்கம் மூலமாக வசூல் ஈட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் கலைத்துறையில் அவர் செய்த பங்களிப்புக்காக இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்ம பூஷன்’ சமீபத்தில் அளிக்கப்பட்டது. அதைப் பெற்றுக் கொண்டு சென்னைத் திரும்பினார். தற்போது தன்னுடைய கனவான கார் ரேஸ் பந்தயங்களில் மீண்டும் ஈடுபாடு காட்டத் தொடங்கியுள்ள அஜித், வருடத்துக்கு ஒரு படம் என நடிக்கும் முடிவில் உள்ளாராம்.

குட் பேட் அக்லி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித்- ஆதிக் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தில் எப்படியாவது எஸ் ஜே சூர்யாவை நடிக்கவைக்க வேண்டுமென ஆதிக் ரவிச்சந்திரன் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவர் இயக்கிய ‘மார்க் ஆண்டனி’ படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமானக் காரணமாக எஸ் ஜே சூர்யா இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி & கமல் இணையும் படம் ட்ரப்பா?... திடீரெனப் பரவும் தகவல்!

இரண்டு பக்கத்தையும் பார்க்கவேண்டும்… தெருநாய்ப் பிரச்சனை குறித்து மிஷ்கின் கருத்து!

திருமணத்துக்குப் பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை… ரகுல் ப்ரீத் சிங்!

100 கோடி ரூபாய் வசூலைக் கடந்த ‘லோகா’…!

அப்படிலாம் ரசிகர்கள பிடிச்சுட முடியாது ராஜா.. சிவகார்த்திகேயன் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments