பிரபல நடிகை நயன்தாரா நடித்த முதல் திகில் படமான 'மாயா' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்து வெற்றிப்படமானது. இந்த படத்தை இயக்கிய இயக்குனர் அஸ்வின் சரவணன், இந்த படத்தின் வெற்றி விழாவின்போது, தனது அடுத்த படத்தின் கதையின் நாயகி நயன்தாராதான் என்று கூறியிருந்தார்
ஆனால் தற்போது அஸ்வின் இயக்கவுள்ள அடுத்த படத்தின் முக்கிய கேரக்டரில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நயன்தாராவின் கால்ஷீட் கிடைக்காததால் வேறு வழியின்றி அவருக்காக படைத்த கேரக்டரை ஆண் கேரக்டராக மாற்றி அதில் எஸ்.ஜே.சூர்யாவை அவர் நடிக்க வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படம் குறித்த அறிவிப்பு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளிவரும் என்றும் இந்த படத்திற்கு ரோன் யோஹான் இசையமைப்பார் என்றும் அஸ்வின் கூறியுள்ளார். ரோன் யோஹான் 'மாயா' படத்திற்கு இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.