Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பந்தாவா பேசிய விஜய், பல்டி அடித்த அப்பா - வைரல் வீடியோ!

Advertiesment
பந்தாவா பேசிய விஜய்,  பல்டி அடித்த அப்பா - வைரல் வீடியோ!
, புதன், 23 அக்டோபர் 2019 (14:52 IST)
நடிகர் விஜய் தான் நடிக்கும் ஒவ்வொரு புது படத்தின் போதும் ரசிகர்களின் மண்டையை சோப்பு போட்டு கழுவதையே வேலையாக வைத்துள்ளார். தெறி , மெர்சல் , சர்க்கார், பிகில் என தான் நடித்து முடிக்கும் ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் மோட்டீவேஷ்னல் ஸ்பீச் என கூறி தமிழக அரசை மறைமுகமாக தாக்குவார். அதற்கு அவரது ரசிகர்கள் பலத்த கரகோஷங்களுடன் கைத்தட்டி வரவேற்றாலும் அடுத்த நொடியில் இருந்து அரசியல்வாதிகள் கொந்தளிக்க ஆரம்பித்து விடுவார்கள். 


 
ஆனால் , அதைபற்றியெல்லாம் துளி கூட கவலைப்படாமல் தன் இஷ்டத்துக்கு  பேசிவிட்டு படத்தை ப்ரோமோட் செய்துவிட்டு போய்விடுவார் விஜய். இது அவர் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்கு தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதனாலே விஜய் மிகவும் கெத்தானவர் , தைரியமான என்ற பட்டதை சூட்டினர் ரசிகர்கள். அதோடு விட்டுவிடாமல் தளபதி அரசியலுக்கு வந்தால் தலைமை சிறப்பாக இருக்கும் என ஒவ்வொரு ரசிகன் மகனின் மனதிலும் வேரூன்ற செய்துவிட்டார் விஜய். அண்மையில் கூட பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அரசியலவாதிகளை சீண்டி விஜய் பேசிய அரசியல் வசனங்களுக்கு பல எதிர்ப்புகளும் பாராட்டுகளும் எழுந்தது. 
 
இந்நிலையில் தற்போது விஜய் பேசியதை அவரது தந்தை எஸ்.ஏ சந்திர சேகரிடம் பிரபல ஊடகம் பேட்டி எடுத்துள்ளது.அப்போது, "யார் யாரை எங்கெங்கே வைக்கணுமோ அங்கங்க வைத்தால் பிரச்சனை இல்லை" இந்த விமர்சனம் ஆளுங்கட்சியை நோக்கி வைத்ததாக புரிந்துகொள்ளப்படுகிறது. என தொகுப்பாளர் கேட்க..அதற்கு பதிலளித்த எஸ்.ஏ சந்திர சேகர் "நான் எப்படி நினைக்கவில்லை" எல்லாரும் அப்டி நினைத்தால் அது என் தப்பு இல்லை.. அது அவர் தப்புமில்லை அந்த சொல்லில் விஜய் கூறிய அர்த்தம்.. அப்பாவை அங்கே வைக்கணும் ..அம்மாவை அங்கே வைக்கணும்..இயக்குனரை அங்க வைக்கணும் , தயாரிப்பாளரை அங்க வைக்கணும்.. நண்பர்களை அங்க வச்சுக்கணும் .. மனைவியை அங்க வைக்கணும் என மழுப்பலான பதிலை அடுக்கடுக்காக கூறி  மோட்டீவேஷ்னல் ஸ்பீச்சை மொக்க செய்துவிட்டார். 
 
குடும்பத்தில் ஒரு பிரச்னை இருந்தால் எப்படி குடும்பத்தலைவரிடம் சொல்வோமோ அப்படிதான் நாங்கள் முதல்வரிடமும் , பிரதமரிடமும் சொல்கிறோம். அவர் எங்களுக்கு எதிராளி கிடையாது அப்பா மாதிரி ..அம்மா மாதிரி.. தாய் மாதிரி ...தந்தை மாதிரி அவங்க..எந்த இடத்திலும் விஜய் இது தவறு என்று சுட்டி காட்டியதே இல்லை என கூறி மகனின் வீர உரைக்கு அந்தர் பல்டியடித்துவிட்டார்.  எஸ்.ஏ சந்திர சேகரின் இந்த பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிகிலே!!! டிவிட்டரில் ஆர்பறித்த விஜய்: கொண்டாடும் ரசிகர்கள்!!