Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

RRR படத்தின் நாட்டுக்கூத்து வீடியோ.... செம்ம அப்டேட்டை வெளியிட்ட லைகா!

RRR படத்தின் நாட்டுக்கூத்து வீடியோ.... செம்ம அப்டேட்டை வெளியிட்ட லைகா!
, திங்கள், 11 ஏப்ரல் 2022 (15:34 IST)
RRR படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடலின் வீடியோ இன்று வெளியாக உள்ளது.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில், ஜூனியர் என்.டி.ஆர் – ராம்சரண் – ஆலியாபட் உள்ளிட்ட நட்சத்திரங்களில் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆர்.ஆர்.ஆர்'( ரத்தம் ரணம் ரெளத்திரம்). மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக நேற்று வெளியானது.

இந்நிலையில் உலகளவில் இந்த படத்துக்கு செய்யப்பட்டுள்ள வியாபாரம் பற்றிய தகவல் சினிமா உலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. சுமார் 450 கோடி ரூபாயில் உருவான இந்த படம் இதுவரை 800 கோடி ரூபாய் வரை பிஸ்னஸ் செய்யப்பட்டுள்ளதாம். தெலுங்கில் எடுக்கப்பட்ட படத்தை பேன் இந்தியா படமாக்கி செம்மையாக தயாரிப்பாளருக்கு கல்லா கட்டி கொடுத்துள்ளார் ராஜமௌலி என்று கருத்துகள் சொல்லப்பட்டன.

இந்நிலையில் இன்று இந்த படத்தில் இடம்பெற்றுள்ள நாட்டுக்கூத்து பாடலின் வீடியோ இணையத்தில் வெளியாக உள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தியேட்டருக்கு இப்படிதான் வரப்போறாங்களோ… விஜய் ரசிகர்களின் பீஸ்ட் சட்டை!