Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினியின் கோட்டையான ஜப்பானில் ஆர் ஆர் ஆர் படைத்த சாதனை!

ரஜினியின் கோட்டையான ஜப்பானில் ஆர் ஆர் ஆர் படைத்த சாதனை!
, செவ்வாய், 13 டிசம்பர் 2022 (09:04 IST)
எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆல்யா பட், அஜய்தேவ்கன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். பாகுபலி வெற்றிக்குப் பின்னர் உருவான இந்த படம்உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்தது இந்த படம்.

இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் போட்டியிடுகிறது. இதையடுத்து படம் ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. இதற்கான ப்ரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இதுவரை ஜப்பானில் அதிக வசூல் செய்த இந்திய படமாக ரஜினியின் முத்து படமே அமைந்திருந்தது. அந்த படம் சுமார் 23.5 கோடி ரூபாய் வசூலித்தது. ஆனால் இப்போது ஆர் ஆர் ஆர் திரைப்படம் 24 கோடி ரூபாய் வசூலித்து அந்த சாதனையை முறியடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமானியின் அறையில் நுழைய முயன்ற பீஸ்ட் பட நடிகர்… பரபரப்பு சம்பவம்!