பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாளான இன்று ஆர்.ஆர்.ஆர் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் எண்டிஆர் நடித்துள்ள படம் ஆர்.ஆர்.ஆர். சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதராம ராஜூ மற்றும் கோமரம் பீம் ஆகியோரது வாழ்க்கையை மையப்படுத்திய இந்த கதையை ஆக்ஷன் படமாக இயக்கியுள்ளார் ராஜமௌலி.
இந்த படம் இந்த ஆண்டு ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு தாமதம், இரண்டாம் அலை கொரோனா உள்ளிட்ட காரணங்களால் 2022ம் ஆண்டு மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாளையொட்டி ஆர்.ஆர்.ஆர் குறித்த அப்டேட், போஸ்டர் வெளியாகலாம் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே இன்று ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் கோமரம் பீம் கதாப்பாத்திரத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.