Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆகஸ்ட்டில் வெளியாகிறது ஆர்ஆர்ஆர் முதல் பாடல்; தமிழில் பாடியது யார் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 27 ஜூலை 2021 (11:16 IST)
ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் முதல் பாடல் ஆகஸ்டில் வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.

தெலுங்கு இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் எண்டிஆர் நடித்துள்ள படம் ஆர்.ஆர்.ஆர். சுதந்திர போராட்ட வீரர்களான அல்லுரி சீதராம ராஜூ மற்றும் கோமரம் பீம் ஆகியோரது வாழ்க்கையை மையப்படுத்திய இந்த கதையை ஆக்‌ஷன் படமாக இயக்கியுள்ளார் ராஜமௌலி. இந்த படத்திற்கு மரகதமணி இசையமைத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 இந்திய மொழிகளில் இந்த படம் வெளியிடப்பட உள்ள நிலையில் இந்த படத்திற்கான தீம் சாங் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி ஆகஸ்டு 1ம் தேதி காலை 11 மணிக்கு ஆர்ஆர்ஆர் படத்தின் நட்பு என்னும் முதல் பாடல் வெளியாகிறது. தமிழில் இந்த பாடலுக்கு மதன் கார்க்கி வரிகள் எழுதியுள்ள நிலையில், இசையமைப்பாளர் அனிருத் பாடலை பாடியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்துக்கு இசையமைக்கும் சாய் அப்யங்கர்?

சிவகார்த்திகேயனை இயக்குகிறார்களா புஷ்கர்- காயத்ரி?

முந்தையத் தோல்விகளை வைத்து இயக்குனர்களை எடை போடுவதில்லை- விஜய் சேதுபதி கருத்து!

த்ரிஷ்யம் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடிக்க முடியாமல் போனது ஏன்?- இயக்குனர் ஜீத்து ஜோசப் பதில்!

பறந்து போ மற்றும் 3BHK படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments