பஹத் பாசில் நடித்துள்ள மாலிக் படத்தைப் விக்ரம் படக்குழுவினரோடு இணைந்து கமல் பார்த்துள்ளார்.
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் பஹத் பாசிலுக்கு மலையாள மொழி தாண்டியும் ரசிகர்கள் ஏராளம். அவரின் படங்கள் தமிழகத்திலும் சிறப்பான வரவேற்பைப் பெற்று வருகின்றன. செலக்ட்டிவான படங்களில் அழுத்தமான கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் பகத் பாசிலின் நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது கமல் ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குகிறார். இதில் மல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய முன்னணி ரோல்களில் நடிக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர் அவர் படப்பிடிப்புக் குழுவோடு இணைந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் நடிப்பில் அமேசான் ப்ரைமில் வெளியான மாலிக் படத்தை படக்குழுவினர் அனைவருக்கும் போட்டுக் காட்டியுள்ளார். அப்போது கமல்ஹாசனும் படத்தைப் பார்த்தாராம். மாலிக் படம் நாயகன் படத்தின் பாதிப்பால் உருவாக்கப்பட்டதாக அந்த படத்தின் இயக்குனர் கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.