Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“என் மகள் படத்தை மார்பிங் செய்து அவதூறு செய்கின்றனர்..” –ரோஜா ஆதங்கம்!

Advertiesment
“என் மகள் படத்தை மார்பிங் செய்து அவதூறு செய்கின்றனர்..” –ரோஜா ஆதங்கம்!
, வியாழன், 29 டிசம்பர் 2022 (15:16 IST)
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகிய அவர், இயக்குனர் ஆர் கே செல்வமணியை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். மெலும் ஆந்திராவில் அரசியலிலும் ஈடுபட்டார்.

ஆந்திராவில் தற்போது ஆட்சி அமைத்துள்ள YSR காங்கிரஸ் ஆந்திராவில் ஆட்சி நடத்தி வருகின்றது. இதில் ரோஜாவும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது ஜெகன் மோகன் ரெட்டி அமைச்சரவையை மாற்றியுள்ள நிலையில் ரோஜாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் ரோஜா- செல்வமணி தம்பதிகளின் மகள் அன்ஷு மல்லிகா, ஒரு தமிழ் படத்தில் நடிகையாக அறிமுகம் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது சம்மந்தமாக ரோஜாவோடு அவர் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ரோஜா மற்றும் அவரது மகளின் புகைப்படங்களை மார்ஃபிங் செய்து இணையத்தில் அவதூறு செய்யும் விதமாக பரப்பினர். அது சம்மந்தமாக பேசியுள்ள ரோஜா ‘நான் சினிமா மற்றும் அரசியல் என இரண்டு துறைகளிலும் பல பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளேன். ஆனால் என் மீதும் என் குடும்பத்தின் மீதும் சமீபகாலமாக நடக்கும் அவதூறுகள் மிகவும் வருத்தம் அளிக்கின்றன. அதிலும் என் மகள் இதனால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நான் என்ன சொல்வது என்று தெரியவில்லை. பிரபலங்களுக்கு இதுபோல நடப்பது சகஜம்தான் என நான் அவரிடம் சொல்லி வருகிறேன்” என வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''நிறைய வெடிவாங்கி வையுங்கள்'' துணிவு பட டிரெயிலரை பார்த்த பிரபலம் டுவீட்!