Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முட்டிக் கொண்ட பும்ரா & கருண்… சமாதானப் படுத்திய சக வீரர்கள் – ரோஹித்தின் ரியாக்‌ஷன்தான் செம்ம!

vinoth
திங்கள், 14 ஏப்ரல் 2025 (08:19 IST)
நேற்று நடைபெற்ற இரண்டாவது ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 205 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் ரிக்கல்ட்டன் மற்றும் திலக் வர்மா ஆகியோர் சிறப்பாக விளையாடி அணி பெரிய இலக்கை நிர்ணயிக்க உதவி புரிந்தனர்.

இதையடுத்து 206 ரன்கள் என்ற இலக்கோடு களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 193 ரன்கள் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இந்த தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய கருண் நாயர் மிகச்சிறப்பாக ஆடி 40 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்தார். இவர் களத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது அவருக்கும் பும்ராவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு காரசாரமான விவாதம் நடந்தது. கருண் ரன் எடுக்க ஓடும்போது பும்ரா மேல் மோதிவிட்டதால் பும்ரா அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஆறாவது ஓவர் முடிந்தபின்னர் டைம் அவுட்டின் போதும் பும்ரா கோபமாகக் காணப்பட்டு கருணிடம் ஏதோ சீற, அருகில் இருந்த வீரர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். கருண் நாயர், மும்பை கேப்டனிடம் தன் தரப்பு விளக்கத்தை அளித்தார். இது அனைத்தையும் விட இந்த கார சார வாக்குவாதத்தின் போது மும்பை அணி பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா சண்டையை ஜாலியாக ரசிப்பது போல சிரித்துக் கொண்டே கொடுத்த ரியாக்‌ஷன்தான் தற்போது வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய வெற்றியை மழை தடுத்துவிடுமா? கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!

இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments