Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராக்கி படத்தின் ஓடிடி ரிலிஸ் எப்போது?

ராக்கி படத்தின் ஓடிடி ரிலிஸ் எப்போது?
, சனி, 22 ஜனவரி 2022 (15:43 IST)
ராக்கி படம் திரையரங்குகளில் வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையில் இன்னும் ஓடிடி ரிலிஸ் அறிவிக்கப்படவில்லை.

தரமணி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான வசந்த் ரவி தனது அடுத்த படமாக நடித்து முடித்துள்ள ராக்கி படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. இந்த படத்தில் வசந்த்ரவியோடு பாரதிராஜா, ஜெயக்குமார், ரவினா ரவி மற்றும் அஷ்ரப் மல்லிசேரி எனும் மலையாள நடிகர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே உருவான இந்த திரைப்படம் ரிலீஸில் சிக்கியது.

இந்நிலையில் நயன்தாரா தன்னுடைய ரவுடி பிக்சர்ஸ் மூலமாக படத்தை ஒருவழியாக டிசம்பர் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிட்டார். ஆனால் போதுமான வரவேற்பு இல்லை. சினிமா ரசிகர்களுக்கு மட்டும் படம் பிடித்தமானதாக இருந்தது. இந்நிலையில் படம் ஓடிடியில் எப்போது ரிலிஸ் ஆகும் என்ற கேள்வி ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது. இது சம்மந்தமாக தயாரிப்பாளர் தரப்பில் ஓடிடி நிறுவனத்தோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புஷ்பா பாடலுக்கு நடனமாடிய டேவிட் வார்னர்!