Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த மாதிரி ஹீரோ கிடைக்குறது கஷ்டம்!.. தயாரிப்பாளருக்காக கஷ்டப்பட்ட ஆர்.ஜே பாலாஜி!..

RJ Balaji

Raj Kumar

, வியாழன், 23 மே 2024 (18:53 IST)
ரேடியோவில் ஆர்.ஜேவாக பணிப்புரிந்து வந்து படிபடியாக உயர்ந்து தற்சமயம் தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டிருப்பவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி.



ரேடியோவிலேயே நல்ல காமெடியாக பேசக்கூடியவர் என்பதால் சினிமாவில் அவருக்கு காமெடியனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்திக்கொண்ட ஆர்.ஜே பாலாஜி கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கினார்.

பொதுவாக காமெடி நடிகரை அவ்வளவு எளிதாக கதாநாயகனாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் ஆர்.ஜே பாலாஜி நடித்த எல்.கே.ஜி திரைப்படம் விறுவிறுப்பான கதையமைப்பையும், ஆர்.ஜே பாலாஜிக்கு ஏற்ற கதாபாத்திரமாகவும் இருந்ததால் அவருக்கு அந்த திரைப்படம் வரவேற்பை பெற்று தந்தது.

இந்த நிலையில் எல்.கே.ஜி படத்தில் நடிக்கும்போதே ஆர்.ஜே பாலாஜி “என்னால் உங்களுக்கு தயாரிப்பில் ஒரு ரூபாய் கூட நஷ்டமாகாது” என தயாரிப்பாளருக்கு வாக்கு கொடுத்துள்ளார். ஏனெனில் அந்த படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் அதற்கு முன்பு இயக்கிய தேவி, ஜுங்கா மாதிரியான படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்திருந்தன.


இந்த நிலையில் திமிரு காட்டாதடி பாடலை படமாக்குவதற்கு 30 லட்சம் வாங்கிக்கொண்டு விக்னேஷ் சிவனை அழைத்துக்கொண்டு டெல்லிக்கு சென்றார் ஆர்.ஜே பாலாஜி. விக்னேஷ் சிவன்தான் அந்த பாடலை இயக்கினார். மூன்று நாட்களுக்கு படப்பிடிப்பு இருந்தது.

ஆனால் ஒரு நாளிலேயே படப்பிடிப்பு போதும் என கூறிவிட்டார். ஆர்.ஜே பாலாஜி. ஏனெனில் படத்தில் 2 நிமிடங்கள்தான் இந்த பாடல் வரும் இதற்கு 30 லட்சம் செலவு செய்ய வேண்டுமா என நினைத்த ஆர்.ஜே பாலாஜி ஒரு நாள் படப்பிடிப்போடு முடித்துக்கொண்டார்.

அதற்கு 14 லட்சம் மட்டுமே செலவாகியிருந்தது. மீதி பணத்தை தயாரிப்பாளரிடமே கொடுத்துள்ளார். இந்த நிகழ்வை அவர் ஒரு நேர்க்காணலில் பகிர்ந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராம் சரணுக்கு கை மாறிய சூர்யா படம்!.. தமிழில் கால் பதிக்க ப்ளான் போல!..