Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செல்வராகவன் உதவி இயக்குனரின் படத்தில் ரித்திகாசிங்!

செல்வராகவன் உதவி இயக்குனரின் படத்தில் ரித்திகாசிங்!
, வியாழன், 29 ஏப்ரல் 2021 (21:47 IST)
செல்வராகவன் உதவி இயக்குனரின் படத்தில் ரித்திகாசிங்!
செல்வராகவன் உதவி இயக்குனரின் படத்தில் ரித்திகாசிங்!
பிரபல இயக்குனர் செல்வராகவனின் உதவியாளர்கள் ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களை இயக்கி உள்ள நிலையில் தற்போது அவரிடம் உதவியாளராக இருந்த மேலும் ஒருவர் இயக்குனராக அறிமுகமாக உள்ளார் 
 
செல்வராகவன் சில படங்களில் உதவியாளராக இருந்தவர் மைக்கேல். இவர் தற்போது ஒரு புதிய திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார். நாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் உருவாக்கப்படும் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் ரித்திகாசிங் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் இந்த படத்தில் நாயகன் கேரக்டர் இல்லை என்பதும் இது ஒரு அதிரடி ஆக்சன் த்ரில் படம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ரித்திகா சிங் இறுதிச்சுற்று உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்த நிலையில் தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் தனது நடிப்பை முத்திரை பதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சர்பாட்டா பட நடிகர் முக்கிய அப்டேட்