Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிம்பு படத்தில் கதாநாயகியாக ரித்திகா சிங்!

சிம்பு படத்தில் கதாநாயகியாக ரித்திகா சிங்!
, வெள்ளி, 28 ஜனவரி 2022 (09:49 IST)
சிம்பு அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளிவந்த ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்  பின்னர் ஒடிடி தளத்தில் வெளியான போதும் மிகப்பரவலான கவனத்தைப் பெற்றது.  இந்த படத்தை பல திரையுலக பிரபலங்கள் பாராட்டினர். இளைஞர்களுக்கு மிகவும் பிடித்திருந்த இந்த படத்தை அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கி இருந்தார். இந்த படத்தின் வெற்றியால் தெலுங்கில் தானே அந்த படத்தை ரீமேக் செய்துள்ளார் அஷ்வத் மாரிமுத்து.

இந்நிலையில் சிம்பு தனது அடுத்த படத்தில் இயக்குனராக அஷ்வத் மாரிமுத்துவை ஒப்பந்தம் செய்துள்ளார். இப்போது வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வரும் சிம்பு அடுத்து பத்து தல மற்றும் கொரோனா குமார் ஆகிய படங்களை முடித்துவிட்டு அஷ்வத் படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.

இந்த படத்துக்கு இசையமைப்பாளராக லியோன் ஜேம்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் நாயகியாக ரித்திகா சிங் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னணி ஓடிடி நிறுவனத்தோடு படம் இயக்க ஓப்பந்தம் ஆன பா ரஞ்சித்!